Wednesday 30 October 2013

மூலிகையும் மந்திரமும்



 ஸ்ரீ மகாலஷ்மி அஞ்ஜனம்,

      இந்த மகாலாஷ்மி அஞ்ஜனம் நம்மை சகல கிரக தோஷ உபாதையிலிருந்தும் விடுவித்து இஷ்ட சித்தி ஏற்படுத்தித்தரும், மேலும் தொழில் மேன்மை. தனசமர்த்தி. புகழ். பதவி. அனுகூலம். வியாபாரம். உத்தியோகம் ஆகிய எல்லாத்துறைகளாலும் தனலாபத்தையும். மன ஆசைகளையும் மிக சுலபமாக நாம் அடைய வழிவகை செய்யும், துர்மரணம். தீய ஆவிகளின் தொல்லை. செய்வினை தோஷம். முன்னோர்களின் சாபம். கர்ம வியாதி ஆகிய சகலமும் இந்த அஞ்ஜனத்தால் தீரும், இதில் உள்ள மகாவிஜயதன ஆகர்ஷன மூலிகையின் மகிமை பணம். பதவி ஆகியவற்றை ஈர்த்துத்தர வல்லது, இதை எந்த வயதினரும் எந்த பாலினரும். எந்த மதத்தினரும் உபயோகப்படுத்தலாம்,

  இந்த அஞ்ஜனம் செய்ய கரும் துளசி. வேர். நீர். சாம்பிராணி இலை. வெண் தாமரைக்கொடி. சந்தன இலை. அதிமதுரவேர் ஆகிய ஐந்து பொருட்கûளுயம் சமபங்காக எடுத்துக்கொண்டு

ஹரீ - ஓம் - மகா - தேவீ - மகா
லட்சுமி - சர்வ - மங்கள -
பிரதயினி - மம - பிரயத்தன -
காரிய சித்தி -”
   என்ற மந்திரத்தை 1008 தடவை பௌர்ணமி தினம் சந்திரோதய சமயம் கிழக்கு முகமாக உட்கார்ந்து ஜபம் செய்து பின் மேற்படி குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் புது மண்சட்டியில் அத்திமர சமித்தால் நெருப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு பொருளாக போட்டு கரியாக்கி நன்றாக தூள் செய்து தனியாக எடுத்துக் கொண்டு பசு நெய்யில் கலந்து வெண்ணைபோல் உருட்டிக்கொள்ள வேண்டும்,

  பின்பு சாம்பிராணி எண்ணெய். சந்தன எண்ணெய். அசல் வேப்பம் எண்ணெய். கடுகு எண்ணெய். வசம்பு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை சமமாக கலந்து முன்சொன்ன மூலிகை சாம்பல் உருண்டையை கொட்டி கலந்து வெள்ளி அல்லது பீங்கான் கிண்ணியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
பின்னர்

ஹரி - ஓம் - மாக - தேவீ -
மகா - லட்சுமி - ஓம் - ஸ்ரீம் - க்லீம் -
ஹரீம் - ஸ்ரீம் - ஆகச்சா -
ஆகச்சா -
மம - மந்திரே - திருஷ்டத் -
திருஷ்டத் - ஸ்வாஹா

  என்ற மூல மந்திரத்தை நாற்பத்தெட்டு தினங்கள் சந்தியாவந்தன நேரத்தில் வடக்கு முகமாக உட்கார்ந்து தினசரி 2016 தடவைகள் ஜபம் செய்து அஞ்ஜனத்தில் ஊதிவிடவும் இதேபோல் நாற்பத்தெட்டு நாள் செய்து நாற்பத்தொன்பதாம் நாள் ஐந்து அம்மன் கோவில் சென்று அம்மனை தரிசனம் செய்து பின்னர் அஞ்ஜனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்,

 இதேபோன்று

சரஸ்வதி அஞ்ஜனம்

என்று ஒன்று உள்ளது, இதை மை போலவும் உபயோகம் செய்யலாம், சாம்பிராணி போல் தூபம் போட்டு வாசனையும் பிடிக்கலாம், இதனால் ஞாபகமறதி. சபைக்கூச்சம். திக்குவாய். படிப்பில் ஊக்கமின்மை. தொழில் சிறத்தையின்மை. குரல் வியாதிகள் விலகும்,


இது செய்ய தேவையான பொருட்கள்

கருந்துளசி வேர். ஜாண்டு காய்கள். நெறிஞ்சி முள். வாலாட்டி மர இலை. வேப்பம்பழம். யானை வணங்கி வேர். பலாவேர். தொட்டாசுருங்கி வேர். மாதுரை இலை. கருவேம்புச்சாறு. சீந்தல் கொடி. நன்னாரித்தூள். விஷ்ணுகிரந்தி இலை. சிவகிரந்தி இலை. பிரம்ம பத்திரம்.
வாதநாராயணப்பட்டை. மருதம்பட்டை. சீகத்துக்காய்தூள். இலவஞ்சிக்கொடி. கடலைச் செடியின் வேர் ஆகிய இருபது மூலிகைகளையும் நிழலில் தனித்தனியாக உலர்த்தி சமஎடை எடுத்து இடித்து நன்றாக தூள் செய்து விபூதி பக்குவமாக்கி அத்துடன் இருநூறு கிராம் கற்பூரத்தை பொடி செய்து பசங்கன்று குட்டியின் சாணத்தில் பிசைந்து அதனுள் மேற்படி மூலிகைப்பொருட்களை கொழுக்கட்டையில் பூரணம் வைப்பது போல் வைத்து உருட்டி ஒன்பது நாட்கள் வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,

  10-ஆம் நாள் சரஸ்வதியை தியானித்து காயவைத்து சாணி உருண்டைகளை எடுத்து ஒரு அகலமான பானை ஓட்டில் வைத்து கற்பூரம் சந்தனக்குச்சிகளைக் கொண்டு நெருப்பிலிட்டு அசல் விபூதியைப்போல் ஆக்கிக் கொள்ளவேண்டும், இந்த விபூதியை 1/4 கிலோ சாம்பிராணி எண்ணெயில் கலந்து கிளறி அத்துடன் ஜவ்வாது. கஸ்தூரி. குங்குமப்பூ. சந்தன எண்ணெய் இவைகளை விட்டு பிசைந்து அஞ்ஜனமாக்கிக் கொள்ள வேண்டும், பின்னர்.
ஹரி - ஓம் - ஐம் - வேதகாரோ -
மந்த்ரகாரோ - வித்வாந் - ஸமர -
மர்தந - மஹா - மோக - நிவாஸீ -
மஹாகோரோ - வசீகர -”
   என்ற மூல மந்திரத்தை தினசரி 82 வீதம் 82 நாளைக்கு சொல்லி அஞ்சனத்தில் ஊதிவிட வேண்டும், அதன்பிறகு புருவங்களுக்கு மத்தியில் இந்த அஞ்ஜனத்தை பொட்டாக இட்டுக் கொண்டாலே நினைவு ஆற்றல் பெருகும், சரஸ்தி தேவியின் பரிபூரண கிருபையால் அபாரமான அறிவு ஒளி வீசும்,