Sunday 3 November 2013

மாந்திரீகம்-7(செல்வம்)

லெட்சுமியா அல்லது குபேரனா ?                  .                      -

     செல்வம் வேண்டி வணங்குவதற்குரிய தெய்வம் லெட்சுமியா அல்லது குபேரனா என்ற ஒரு கேள்வி எழலாம். குபேரனைப் பற்றி பல கருத்துக்கள் உள்ளன.
     ஒருவருக்கு பொருளாதார அவசர தேவைகளுக்கு குபேரனை வணங்கலாம். செல்வம் பெருகும். ஆனால் ஒரு மங்களகரமான நிகழ்வாக இருக்காது. ஆகவே  குபேரனை அவசர தேவைக்கு உபயோகப்படுத்தும் தெய்வமாக வணங்கலாமே ஒழிய ஒரு சிறப்பான தெய்வமாக குபேரனை எடுத்துக் கொள்ளமுடியாது. ஆனால் லெட்சுமியோ சகல அம்சமும் கொண்ட தெய்வமாகும். குபேரேன் பணம், செல்வம் ஆகியவைகளுக்கு தெய்வம் ஆகும்.  லெட்சுமியோ எட்டு விதமான மங்கள காரியங்களுக்கு உரிய தெய்வமாகும். லெட்சுமி அருளும் அருள் கொடை கடாச்சியமாகும். ஆனால் குபேரேன் அருளுவதோ பொருள் கொடையாகும்.
     சில நூல்கள் குபேரேன் லெட்சுமியின் கீழ் இருந்து லெட்சுமி சொல்லும் செயல்களை அருள் பாலிக்கும் ஒரு தெய்வமாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் தற்சமய பொருளாதார உயர்வுக்கு குபேரனை வணங்கி பின்னர் லெட்சுமியின் அருளைப் பெற வேண்டுகிறோம். சீக்கிரத்தில் லெட்சுமியைப் பற்றியும் லெட்சுமியின் தத்துவார்த்தத்தையும், பூஜை முறைகளையும் சிறப்பாக விளக்கி ஒரு தொகுப்பு வெளியிட நினைத்துள்ளோம்.

     குபேரேன் விஸ்கரவாமுனிவரின் மூத மகன் ஆவார். அவருக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒரு மனைவி தெய்வீகப் பெண். அவர் குபேரேனைப் பெற்றெடுத்தார். அவருடைய இரண்டாவது மனைவி ஒரு  அரக்கி. அவள் இராவணனை பெற்றெடுத்தாள். குபேரன் இலங்கையை செல்வச் செழிப்புடன் ஆட்சி செய்து வந்தார். ஆனால் இராவணனின் தாய் அவர்கள் இருவருக்குள் பகையை உருவாக்கினார். அவள் தன் மகனாகிய இராவணனிடம் தனது அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ளும்படி கூறினாள். இராவணன், குபகன், மற்றும் விபூஷன் ஆகியோர் காட்டிற்குச் சென்று கடுந்தவம் இருந்து இலங்கையை எல்லாவிதத்திலும் பெரிய நாடாக ஆக்க வரம் பெற்றார். அவ்வாறு வரம் பெற்றபின் தனது அண்ணனாகிய குபேரனை அடித்து விரட்டிவிட்டு இலங்கையில் ஆட்சி செய்தார். இதனால் வருத்தமடைந்த குபேரேன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து செல்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக அந்தஸ்தைப் பெற்றான்..

லெட்சுமி
               .
          யார் அந்த லெட்சுமி என்ற கேள்வி நம்முள் எழலாம். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும், ஆன்மீகத்தின் உயர்படியில் இருக்கும் இராஜ யோகிகளுக்கு ஒருவிதமாகவும் காட்சி அளிப்பவளே லெட்சுமி. ஆன்மீகத்தின் அடி என்று கூறப்படும் பக்தி யோகிகளுக்கு பாற்கடல் அரசனின் அழகிய புத்திரி. ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் ஸ்ரீரங்கரின் மனைவி. இவள் கடைக்கண் பார்வை எல்லோருக்கும் தேவை. பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை என்பர். செல்வதிற்க்காக என்ன என்ன போட்டி நடைபெறுகிறது. நெறியற்ற முறையில் பெற்ற செல்வம் லெட்சுமி காடாட்சியமே அல்ல. அவ்வாறு பெற்ற செல்வம் அவர்களுக்கும், அவர்கள் வாரிசுகளுக்கும் சாபமாக அமையும். மன அமைதியையும் கெடுத்து விடும்.
          எது ஒரு லெட்சுமி கடாட்சியமான வீடு என்று கூறும்பொழுது காலையில் எழுந்து கடவுளைத் துதிக்கும் வீட்டிலும், காலையில் முற்றம் தெளித்து கோலமிட்டு வீட்டில் தீபம் ஏற்றும் வீட்டிலும், கணவன், மனைவி, மற்றும் பிள்ளைகளுக்கிடையே சண்டையோ, போராட்டமோ இல்லாத வீட்டிலும், ஆச்சாரமும், தருமமும் அனுஸ்டிக்கப்படும் வீட்டிலும், தெய்வ சங்கல்ப்பமும், பெரியவர்களை மதிக்கும் வீட்டிலும், விருந்தினரை உபசரிக்கும் வீட்டிலும், வீட்டில் உபயோகப்படுத்தும் பாத்திரங்களை கண்டபடி பரப்பிப் போடாத வீட்டிலும், தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களை சிந்தி சிதறாமல் இருக்கும் வீட்டிலும், இரத்தத்தையே பாலாக நமக்கு கொடுக்கும் கோமாதாவை கெளரவிக்கப்படும் வீட்டிலும் நான் இருப்பேன் என்று லெட்சுமி கூறுகிறாள்.
          லெட்சுமி யார் வீட்டில் தங்கமாட்டேன் என்று கூறும்பொழுது கலகம் செய்பவர் வீட்டில், குரோதமாக பேசுபவர் வீட்டில், பொய் கூறுபவர் வீட்டில், சந்தியா காலத்தில் தம்பதிகள் இசைந்து இருப்பவர் வீட்டிலும், கால் அலம்பாது வீட்டிற்குள் வருபவர் வீட்டிலும், தாய் தந்தை, முதியோர்க்குச் செய்ய வேண்டிய பணியைச் செய்யாதவர் வீட்டிலும், முடி, எரிந்தகரி ஆகியவற்றை மிதிப்பவர் வீட்டிலும் நகத்தைக் கடிப்பவர் வீட்டிலும் லெட்சுமி தங்க மாட்டாள். இவ்வளவு நேரமும் எங்கு லெட்சுமி வருவாள் எங்கு லெட்சுமி இருக்கமாட்டாள் என்று பார்த்தோம். இனி லெட்சுமி எங்கு நிரந்தரமாக வாசம் செய்கிறாள் என்று பார்ப்போம்.
          லெட்சுமி தனது ஸ்ரீரங்கரின் மார்பில் குடியேறியுள்ளாள். தாமரை மலர் லெட்சுமியின் உறைவிடம் என்று எல்லோருக்கும் தெரியும். தாமரை மலர் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மலராகும். இது ஒரு தெய்வீக மலர் என்று எல்லோராலும் போற்றப்படுகிறது. இந்தியாவில் கோமாதாவை புனிதமாக கொண்டாடுகின்றனர். தாய், குழந்தைக்கு கொடுக்கும் பாலைப் போல நமக்கு பாலைக் கொடுப்பதால் தான் என்னவோ பசுவை கோமாதா என்று கூறுவர். லெட்சுமிக்கு பிடித்தமான அர்ச்சனைக்கு உரிய பொருள் வில்வம் ஆகும். இதற்கு ஸ்ரீவிருச்சம் என்ற வேறு பெயரும் உண்டு. லெட்சுமி கற்புடைய மாதர்களின் சீமந்த்ததில் (உச்சிவடுகு ஆரம்பத்தில்) இருக்கிறாள். யானையின் தலைப் பாகத்தில் வசிக்கிறாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
          லெட்சுமி வசிக்கும் இடம் தாமரைப் பூ ஆனாலும் அவளுக்கு பிடித்த பூவோ செவ்வந்தி என்ற சாமந்திபூ ஆகும். லெட்சுமிக்கு பிடித்தது நெல்லிக்கனி ஆகும். நெல்லிமரம் லெட்சுமியின் சம்பூரண அருள் பெற்றதாகும். நெல்லிக்காய் கற்ப விருட்சத்தில் ஒன்றாகும். நெல்லிக்கனியை உண்டால் முதுமை போய் வாலிபம் வரும். எல்லோரும் அவர்கள் வீட்டில் கண்டிப்பாக நெல்லி மரத்தை வைத்தால் லெட்சுமி காடாட்சியம் உண்டாகும். நெல்லிக்கனியை தர்மம் செய்தவர்க்கு ஆதிசங்கரர் லெட்சுமி அருளால் பொன்மழை பெய்ய வைத்தாலர். ஆகவே கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒரு மனதோடு சங்கல்ப்பம் செய்து பூஜித்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
          பொதுவாக அழகு எங்கு இருக்கிறதோ அங்கு லெட்சுமி கடாட்சியம் இருக்கும். எங்கு மங்கள காரியங்கள் நடக்கின்றதோ அங்கு லெட்சுமி இருப்பாள். எங்கு மங்கள வஸ்துக்கள் இருக்கின்றதோ அங்கு லெட்சுமி இருப்பாள். மஞ்சள், தயிர், பால், பொன், சந்தனம், குங்குமம், கஸ்தூரி, கோரோசனை போன்றவைகள் மங்களப் பொருள்களாக கருதப்படும். பூர்ண கும்பத்தில் லெட்சுமி வாசம் செய்கிறாள் என்ற ஐதீகம் உண்டு. குங்குமம், ஒரு தெய்வீகச் சின்னம். அந்த குங்குமத்தை பெண்கள் முடியின் முன் வகிட்டில் வைப்பதால் லெட்சுமி அங்கு குடியேறுவதாகக் கூறுவர். குங்குமத்தை ஸ்ரீசூரணம் என்பர். அது லெட்சுமியைக் குறிக்கிறது. வீட்டில் போடப்படும் கோலம் லெட்சுமிக்கு பிடித்தது. சந்தனம் லெட்சுமிக்கு பிடித்த ஒன்றாகும். வாழை, மாவிலைத்தோரணம், வெற்றிலை, யானை, கண்ணாடி, ஸ்வஸ்திகா சின்னம் எல்லாம் லெட்சுமிக்கு பிடித்தவை.
பொதுவாக லெட்சுமியை அஷ்டலெட்சுமி என்று கூறுவார்கள். அந்த அஷ்ட லெட்சுமிகள் பின் வருமாறு,
1)     கஜ லெட்சுமி :- இவள் இருபக்கமும் யானையுடன் இருப்பாள். தந்திர சாஸ்திரத்தின் மூலமும் இவள் அருளைப் பெறலாம். இவளை வழிபடுவதால் அரசரைப் போல் வாழலாம். அரச பதவி, அரசபதவியில் உயர்வு கிடைக்கும்.
2)     ஆதி லெட்சுமி :- மஞ்சள் நிற ஆடையுடன் சகல சௌபாக்கியத்துடன் இருப்பவள். இவளை வழிபடுவதால் சகல நன்மைக்குரிய சக்திகளைப் பெறலாம்.
3)     சந்தான லெட்சுமி :- இவள் பூர்ண கும்பத்துடன் அபயவரத்துடனும் இருபுறமும் பெண்கள் இருக்க மடியில் குழந்தையுடன் இருக்கிறாள். இவளை வணங்குவதால் வம்சவிருத்தியும், குழந்தைப் பாக்கியமும் பெறலாம்.
4)     தன லெட்சுமி :- இவள் பொன் போன்ற மேனியுடன் சகல சம்பத்துடன் எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவளை வணங்குவதால் எல்லாவித தனங்களும் கிடைக்கும்.
5)     தானிய லெட்சுமி :- இவள் கையில் கரும்புடன் செந்தாமரையுடனும் அமர்ந்திருக்கிறாள். இவள் பலவித ஆபரணங்களுடன் மங்களமாக வீற்றிருக்கிறாள். இவளை வணங்குவதால் வீட்டில் தன தானிய விருத்தி உண்டாகும்.
6)     விஜய லெட்சுமி :- எட்டு கைகளுடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். அவள் கையில் கத்தி, பாசக்கயிறு, சக்கரம், அபயம், கேடயம், அங்குசம், சங்கு, வரதம், போன்றவைகள் இருக்கின்றன. அருகில் அன்னப்பறவை உள்ளது. வாழ்க்கையில் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவதற்கு இவள் அருள் தேவை.
7)     வீர லெட்சுமி :- இவள் எட்டு கைகளில் அபயம், சக்கரம், சங்கு, சூலம்,
பானம், வரதம், வில், மண்டை ஓடு ஆகியவற்றை கையில் ஏந்தி உள்ளாள். வெற்றியின் அறிகுறியாக வெற்றிமாலையை அணிந்துள்ளாள். இவளை வணங்குவதால் விவேகத்துடன் கூடிய வீரம் கிடைக்கும்.
8)     மகா லெட்சுமி :- இவள் நான்கு கைகளுடன் இருக்கிறாள். வருபவர்களுக்கு அபயம் தரும் அபய முத்திரையுடன் ஒரு கையும், வரும் பொருள் உபயமும் கொடுக்கும் வரத முத்திரையுடன், தாமரையும் ஏந்தியவளாய் இருக்கிறாள். இந்த லெட்சுமியை வணங்குவதால் வீடு, அறம், பொருள், இன்பம் இந்த நான்கையும் பெறலாம்.
லெட்சுமிக்குரிய பண்டிகைகள் :-
          வரலெட்சுமி விரதம், இது சுமங்கலிப் பெண்களால் வணங்கப்படுவது. தீபாவளி அன்று லெட்சுமி நல்லெண்ணையில் இருப்பதாக எண்ணுவது ஐதீகம். சிலர்  நல்லெண்ணையை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இட்டு அதில் ஒரு சிறு தங்கப் பொருளைப் போட்டு தீபாவளி அன்று திறந்த வெளியில் வைத்து அதை எடுத்து அதிகாலையில் குளிப்பார். இந்த எண்ணையில் லெட்சுமியின் சகல சக்தியும் பெற்றதாக எண்ணுவர். இனி லெட்சுமியை எவ்வாறு வணங்கலாம் என்று பார்ப்போம்.
          லெட்சுமியை வணங்குபவர்களுக்கென்று சில அனுஸ்டான முறைகள் இருக்கின்றன. எப்பொழுதும் அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளிக்கவேண்டும். காலையில் எழுந்ததும் முதலில் பின் வாசலைத் திறந்து இருளின் தெய்வத்தை பின் வாசல் வழியாக அனுப்பி விட்டு பின்னர் முன்வாசலை திறந்து லெட்சுமியை வரவேற்க வேண்டும். அன்புடனும் பாசத்துடனும் கணவன், மனைவி வாழ வேண்டும். ஆடம்பரமற்ற உள்ளத்தைக் கவரும் உடைகள் அணியவும். பார்ப்பதற்கு அழகான அணிகலன்கள் அணியலாம். சுவையான நல்உணவுகள் உண்ணலாம். தினம் இருவேளை தாம்பூலம் உண்ணலாம். மனஅமைதித் தரும் வாசனைப் பொருள்களை உபயோகிக்க வேண்டும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய இசையைக் கேட்கலாம். நல்ல வாசனை கொண்ட மலர்களை உபயோகிக்கலாம்.
குபேரன்

           குபேரன் செல்வத்திற்கு அதிபதி. இவர் வடக்கு திசைக்கு உரிய காவல் தெய்வம் ஆகும். இவர் வடக்கு திசையில் இருந்து உலகை பாதுகாக்கிறார்.  இவர் பூமியில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்திற்கும் அதிபதி. வேதங்கள் குபேரனை வாமசார தெய்வமாக விவரிக்கிறது. ஆனால் புராணங்களோ குபேரனை தெய்வமாக வர்ணிக்கிறது.
           குபேரன் புத்தமதம், ஜெயன மதம், ஜமண மதம் ஆகியவற்றில் செல்வத்திற்கு அதிபதியாக கூறப்படுகிறது. இவர் ஒரு எடக்குமடக்கானவர். குபேரன் பூலோகத்தில் வசிக்கும் ஆத்மாக்களுக்கு அரசன். ஆம் அந்தகாரத்தின் அரசன் என்று வேதங்கள் கூறுகின்றது. இவர் எக்தர்களுக்கு எல்லாம் தலைவர். பெரிய எத்துவாளி. ஆனால் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் உலகை ஆளும் பார்வதியை கண்டு காமமோகம் கொண்டதால் பார்வதி கோபம் அடைந்து விகார தோற்றம்  உடையவராக ஆகும்படி சபித்துவிட்டார். அதனால் அவர் குட்டையானவர், வட்டமுகம், வெள்ளைநிறம், பெரிய வயிறு, எத்திப்பல், விகாரமான முகம், விகாரமான உடல் தோற்றம் உள்ளவராக ஆகிவிட்டார்.
           இவர் பெரிய சிவபக்தர். சிவனை நோக்கி தவம் செய்து அந்த  தவத்தின் பலனாக அழகாபுரிக்கு வேந்தனாகவும், வடக்குத்திசையில் உலகத்தைக் காக்கும் அதிபதியாகவும் சங்க நிதி, பதுமநிதி, யோக நிதி ஆகிய நிதிகளை சிவனிடம் இருந்து பெற்றதாகக் கூறுவார். சங்கு நிதி என்பது ஒரு சங்கில் இருந்து ஒழுகும் நீரைப்போல எப்பொழுதும் செல்வம் கிடைப்பதாகும். உதாரணமாக தின வியாபாரம் செய்யும் வியாபாரியைக் கூறலாம். பதும நிதியில் பதுமம் என்பதற்கு தாமரை என்று பெயர். தாமரை இதழ் அடுக்கடுக்காக இருப்பதைப் போல் அடுத்தடுத்து செல்வம் சேரும். உதாரணமாக மாதச் சம்பளம் பெறுபவர்கள். யோகநிதி என்பது எதிர்பாராது திடீர் என்று கிடைக்கும் செல்வம் ஆகும். குபேரன் என்ற வார்த்தை குபேரா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது.
           குபேரா என்பதற்கு ஒழுங்கற்ற, அழகற்ற வடிவம் என்று அர்த்தம். குபேரன் வைஸ்வரவா என்பவரின் மகனாகும். வைஸ்வரா என்பதற்கு புகழ் என்று அர்த்தமாம். ஆம் பணத்தைக் கொடுப்பதால் புகழ் வரத்தானே செய்யும். குபேரன் முழு உலகத்தையும் ஆட்சி செய்யும் செல்வத்தின் கடவுள் ஆவார். ஆனால் அதர்வண வேதமோ அவரை சடபத பிராமணன் {சவண்டி பிராமணன், அதர்வண வேதி என்று அழைக்கிறது} குபேரன் தீமைக்கும் தீமையை உருவாக்கும் தெய்வங்களுக்கும், திருடர்களுக்கும், எக்தர்களுக்கும், பணத்திற்காக குற்றம் செய்பவர்களுக்கும் தெய்வமாக கூறுகிறது.
           மகாபாரதம் குபேரனை குலஸ்தாய பிரஜாபதிக்கு மகனாக பிறந்ததாக கூறப்படுகிறது. குபேரனைப் பற்றிய பல அபிப்ராயங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. குபேரன் ஒரு சிறந்த சிவபக்தன். சிவனிடம் கடுந்தவம்  புரிந்து குபேர பட்டத்தைப் பெற்றார் என்று கூறுகின்றனர். எத்தித் திரியும் ஏமாற்றுகாரர்களின் தலைவன் என்றும் சிலர் கூறுகின்றனர். வேறு சில ஐதீகங்கள் பொருள்களுக்கான தீய சக்திகளின் தலைவன் என்று அதர்வண வேதம் கூறுகின்றது. எட்டு திக்குகளையும் காவல் புரியும் அஷ்டதிக்கு பாலர்களின் ஒருவரான வடதிசையை காவல் புரியும் காவல் தெய்வமாக கருதுகின்றனர். வேறுசில ஐதீகங்கள் லட்சுமியின் அருளைப் பெற்று சங்கு நிதி, பதுமநிதியைப் பெற்றார் என்றும் கூறுகின்றது.
           குபேரன் மகாலெட்சுமியின் கீழ் இயங்கும் ஒரு தெய்வமாக கருதப்படுகிறது. குபேரனிடம் நவநிதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவைகள் முறையே பத்ம நிதி, மகாபத்மநிதி, மகரபத்மநிதி, கட்சபபத்மநிதி, குமுத நிதி, நந்தநிதி, சங்கநிதி, நீலநிதி, பத்மினிநிதி, என்ற 9 – நிதிகள் உள்ளன.
           குபேரனை பொதுவாக தீபாவளி அன்றும் அட்சய திதி அன்றும் வணங்குவர். குபேரனை வணங்குவதால் பொருளாதார பிரச்சனைகள் தீரும். தொழில் சார்ந்த வருமானங்கள் கூடும். கொடுக்கல் வாங்கல் சிறப்புறும். குபேரனை வணங்கும் பொழுது வெள்ளி, தங்கம் மற்றும் நாணயங்களை முன் வைத்து வணங்கலாம். பொதுவாக குபேரனை தியானம் செய்யும்பொழுது குபேர முத்திரை இட்டு செய்வது மிகவும் சிறப்பாகும். குபேர முத்திரை என்பது பெருவிரல், ஆள்காட்டிவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஓன்று சேர்த்து வைக்கவேண்டும். மீதமுள்ள இரு விரல்களையும் மடித்து வைக்கவேண்டும். இந்த முத்திரை தன்னம்பிக்கையை கூட்டி [பொருளாதார உயர்வை உயர்த்தும். குபேரனுக்கு உகந்த நாள் பூச நட்சத்திரமாகும்.
           திருப்பதியில் வாழும் திரு.வெங்கடாசலபதி பெருமாளே குபேரனிடம் இருந்து தனது தங்கை திருமணத்திற்கு கடன் வாங்கி இன்று வரை கடனாளியாக இருப்பதுடன் கடனுக்கு வட்டியும் கட்டி வருவதாக ஒரு ஐதீகம் உண்டு. கடனுக்கு கட்டவேண்டிய வட்டியாகிய வருமானம் குறைந்துவிட்டால் வெங்கடாசலபதியின் விக்கிரகத்தின் கீழே விலங்கைப் போடும் வழக்கம் உண்டு. இவ்வாறு விலங்கு போட்டுவிட்டால் ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து பெருமாளுக்கு பணம் செலுத்தி அவரை மீட்பார்கள் என்ற ஒரு ஐதீகம் உண்டு. திருப்பதியில் சேரும் எல்லா காணிக்கைகளும் வெங்கடாசலபதி குபேரனுக்கு செலுத்தும் வட்டி என்று ஐதீகம் உண்டு. {குபேரன் ஒரு கந்துவட்டிக்காரன் போலும்} எப்பொழுது இந்த கலியுகம் முடிகிறதோ அன்று தான் வெங்கடாசலபதி குபேரன் கடனை அடைப்பார்.
            குபேரனை சீனர்கள், திபெத்தியர்கள், பௌத்தர்கள் பல பெயர்களுடன் வணங்குகிறார்கள். குபேரன் தோன்றியது வியாழக்கிழமை. அன்று பூச நட்சத்திரத்தில் குபேரனுக்கு பிடித்த நெய் வைத்தியம், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், குங்குமப்பூ, வெல்லம், போன்ற வாசனைத் திரவியங்கள் மிகுந்த பால் ஆகும். குபேரன் வடநாடுகளில் லட்சுமியின் கணவன் என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இவர் திருமாலின் பத்தினியாம் லக்ஷ்மியின் அன்பிற்கும், பக்திக்கும் பாத்தியமானவர். குபேரன் சாந்த குணமுள்ள ஒரு பொறுமைசாலி.
           இவர் தேவலோகத்தில் குபேர பட்டிணத்தில் அழகாபுரி அரண்மனையில் இருந்து ஆட்சி செய்கிறார். பொதுவாக அபய முத்திரை அருள் பாலிக்கும் முத்திரை ஆகும். உபயமுத்திரை இவ்வுலகத்திற்குரிய பொருளாதார அருளைக் கொடுக்கும் முத்திரை ஆகும். ஆனால் குபேரனே அபயமுத்திரையை காட்டி செல்வத்தை அருளுகிறார். இவர் நவ மணிகள் பதித்த தங்கக் கிரீடத்தில் அமர்ந்து இருக்கிறார். குபேரன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன் என்றும் அவரை அவருடைய மாற்றான் தாய்க்கு பிறந்த இராவணன் ஆட்சியை கைப்பற்றி விட்டார் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

குபேர பூஜை
           குபேர பூஜை  யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். அதுவும் விரதத்தோடு செய்வது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை அன்றும் அமிர்தயோகம் அல்லது சித்தயோகத்தில் செய்வது சிறப்பாகும். குபேரனுடைய படத்தை வைத்து அத்துடன் முறையான குபேர எந்திரத்தை வைத்து பூஜை செய்யலாம். குபேரனுக்கு நவ தானியங்களைப் படைத்து அத்துடன் தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளையும் படைத்து செய்யவேண்டும். ஒரு செம்பில் நீர் இட்டு அதில் மஞ்சள் கலக்கி நூல் சுற்றி மா இலை செருகி அதன் நடுவில் குடுமி உள்ள தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு பூரண கும்பம் ஏற்றவேண்டும். பின்னர் திசைக்கட்டு, விநாயக மந்திரம், குறு மந்திரம் போன்றவைகளை முறையாக பூஜித்து பின்னர் குபேரனுடைய மூல மந்திரம் கூற வேண்டும். பின்னர் குபேரனுடைய பீஜ மந்திரங்களுடைய மந்திரங்களை 108-தடவை அல்லது 1008- தடவை கூறவேண்டும். பீஜ மந்திரங்கள் தான் உயிரோட்டமானவை. எப்பொழுதும் அர்ச்சனை செய்யும்பொழுது ஓமம் செய்யும்பொழுது பீஜ மந்திரங்கள் இல்லாமல் செய்தால் அவை பயனற்றவை என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுவார்.
           பொதுவாக குபேரனுக்கு கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருள்கள் சேர்த்த பாலையோ அல்லது பால் பாயாசத்தையோ, நெய்வேத்தியமாக காட்டவும். பின்னர் கற்பூர தீப ஆராதனையோடு பூஜையை நிறைவு செய்யவும்.  நெய்வேத்தியமாக வைத்த பால், மற்றும் பாயாசத்தை நாம் சாப்பிட்டு பின் எல்லோருக்கும் மீதம் இல்லாமல் விநியோகம் செய்யவேண்டும். பின்னர் தாம்பூலத்தில் காசை வைத்து ஏழை தம்பதிகளுக்கோ அல்லது ஏழை சுமங்கலி பெண்களுக்கோ கொடுக்கவும்.
       குபேர பூஜையில் லட்டையும் நிவேதனம் செய்து எல்லோருக்கும் வழங்கலாம். குபேரன் பிறந்த நாளாகிய வியாழக்கிழமையில் பூச நட்சத்திரத்தில் குபேர பூஜை செய்யலாம். அல்லது பௌர்ணமி தினத்திலும் தியானம் செய்யலாம். தீபாவளி மற்றும் அட்சய திதிகள் குபேரனுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். குபேரன் திருப்பதி வேங்கடாசலபதிக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்பி செல்லும் வழியில் உள்ள இரத்தின மங்களம் என்ற ஊரில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
           குபேரன் கடும் தவம் புரிந்ததைக் கண்ட சிவ பெருமான் தானும் பார்வதியும் தம்பதிகள் சகிதமாக குபேரனுக்கு காட்சி கொடுத்தனர். பார்வதியின் அழகைக் கண்டு வியந்த குபேரன் இப்படி ஒரு அழகான தெய்வத்தை வணங்கவில்லை என்று எண்ண அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பாக ஒரு கண் துடித்து அடங்கியது. இதைக் கண்ட பார்வதி கோபம் கொண்டு சாபமிட குபேரனின் ஒரு கண் வெடித்தது. பின்னர் குபேரன் மன்னிப்புக் கேட்க பார்வதியும் குபேரனுக்கு ஒரு சிறு கண்ணைக் கொடுத்தார். பின்னர் சிவ பெருமான் குபேரனின் பக்தியை மெச்சி எட்டுதிசை காவல் தெய்வங்களில்      வடதிசையின் தெய்வமாக ஆக்கினார்.
           ஆனால் பின்னர் லட்சுமி தேவி குபேரனை தனதானியத்திற்கு காவலாளியாக நியமித்தார். அட்சய திதி அன்று குபேரன் இராவணனிடம் இருந்து சங்குநிதி பெற்றான் என்பது ஐதீகம். குபேரனை வணங்கும் பொழுது லட்சுமியையும் வணங்கவேண்டும். அவ்வாறு செய்தால் தான் செல்வத்தின் தாயாகிய லட்சுமி வழிபாட்டின் முழு நன்மையையும் பெறமுடியும். பொதுவாக இவ்வாறு      குபேர பூஜைகள் செய்யும்பொழுது கண்டிப்பாக ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்யவேண்டும். வட இந்தியாவில் தீபாவளி அன்று குபேர பூஜை செய்வது வழக்கம்.
குபேர வழிபாடு.
           குபேரனை வழிபடுவதற்கு ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை ஆகும்.  குபேர எந்திரத்தையும் வைத்து வழிபடலாம். எவ்வாறு எந்திரத்தை உயிரோட்டமாக முடியும் என்பதை ................................................................................. என்ற எங்களது வெப்சைட்டில் சிறப்பாக கூறியுள்ளோம். அல்லது உங்களையே குபேர எந்திரத்தின் முன் அமர்ந்து தன்னையே குபேரனாக சங்கல்பித்து பூஜை செய்வதாக இருந்தால் வழக்கம்போல் பூர்ணகும்பம் ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து, படைப்பின் வலது புறம் வைத்து பூ, ஊதுவத்தி வைத்து மந்திரங்கள் கூறவேண்டும். பொதுவாக மந்திரங்களில் பீஜ கோஜங்கள் இருக்கவேண்டும். இத்தகைய மந்திரங்களின் மூலம் தான் தகடுகள் உயிர்பெறும். நாமே நம்மை குபேரனாக சங்கல்பித்து தியானம் செய்யும் பொழுது பிராணபிரதிஸ்டை தேவை இல்லை. ஏனெனில் நாமே உயிருள்ளவர்கள் தாம். நாம் வடக்கு திசையை நோக்கி அமர குபேரருடைய படமும், எந்திரமும் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பாகும்.
           குபேரன் ஒரு அரசன் என்பதால் எப்பொழுதும் ஒரு குடையின் கீழ் இருப்பார். கீரிப்பிள்ளையை கையில் வைத்திருப்பார். கீரிப்பிள்ளை பேராசையும், எதிரி தன்மையும் கொண்டதாகும். பாம்பாகிய ஆன்மீக உயர் குண்டலனி சக்திக்கு எதிரி ஆகும். பொதுவாக பொருள்களின் மீது ஆசை வைத்து இவரை தியானம் செய்பவர்களுக்கு ஆன்மீக அருள் சிறிது குறைவாகவே இருக்கும். குபரேனின் மனைவி யட்சி ஆகும். இவர்கள் இருவருக்கும் நலகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் உண்டு. இவர் ஒரு கையில் கீரிப்பிள்ளையும், மற்றொரு கையில் கதையும் வைத்திருப்பார். இவருக்கு யானை வாகனம் ஆகும்.
           குபேரனைப் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. இராமாயணத்தில் விஷ்ரவர் என்பவருக்கும், ராகேஷ் என்பவருக்கும் பிறந்தவரே குபேரன் என்று கூறுகின்றனர். குபரேனின் மாற்றான் தாயின் மகனே ராவணன். அவன் குபரேனை துரத்தி விட்டு இலங்கையை ஆட்சி செய்து  வந்தான். இராவணன் இவருடைய புஷ்பக் தேரை குபேரனிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டார். பின்னர் குபேரர் இராவணனிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. குபேரனுடைய உடல் அம்சத்தைப் பற்றி வேறு சில கருத்துக்கள் உள்ளது. இவன் வெள்ளை நிறம் உடையவன். குட்டையானவன், மூன்று கால்கள் உடையவன். எட்டு பற்கள் உண்டு. ஒரு தொப்பையான வயிறு உண்டு. இவன் உடல் சிதைக்கப்பட்டு இருந்தது. குபேரன் வான் வழியில் அழகிய தேரில் செல்லும்பொழுது நகைகள் மற்றும் முத்து மணிகள் சிதறிக் கொண்டே செல்வான் என்று கூறுகின்றனர். குபேரன் சிவன் மீது ஆழ்ந்த தியானம் செய்து அதி தீவீர சக்தியைப் பெற்றான்.
           விஸ்ரவசு என்பவரின் மகன் வைஸ்ரவணன் இளமையிலேயே காக்கும் கடவுளாம் பிரம்மனை நோக்கி காற்றை மட்டும் சுவாசித்தபடி தவம் இருந்து வரம் பெற்றார். பிரம்மன் எட்டு திக்கு காவல் தெய்வங்களில் வடக்குத் திசையின் காவல்தெய்வம் ஆக்கினார். மேலும் பூலோகத்தில் எல்லா செல்வங்களையும் பாதுக்காக்கும் தெய்வமாக வரம் கொடுத்தார். அன்றில் இருந்து வைஸ்ரவணன் குபேரன் ஆனான்.
குபேரனைப் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. குபேரனுக்கு மனிதன் மற்றும் ஆடு வாகனமாக கூறுகின்றனர். குபேரனின் வழிப்பாட்டுக்குரிய சக்கரங்கள் இரு வகையாக உள்ளன.
           ஒன்று எண்களை அச்சரமாக கொண்ட ஒரு வகையும், இரண்டாவது இதழ்கள், முக்கோணம் போன்ற வரிவடிவங்கள் கூடியதுமாக உள்ளது. தேவலோகத்தில் உள்ள குபேர பட்டிணத்தில் இருக்கும் அழகாபுரி அரண்மனையில் இவர் வீற்றிருக்கிறார். திருமந்திரமும் குபேரனைப் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறது. வடக்குத் திசைக்கு உரியவரும் அழகாபுரியை ஆட்சி செய்யும் குபேரனை நாமும் வடதிசை நோக்கி தவம் செய்ய நாமும் குபேரனைப் போல்  செல்வம் பெறமுடியும் என்று திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
           குபேர சக்கரத்தில் எந்த பக்கம் கூட்டினாலும் 72- வரும்.   72-ல் உள்ள 7-ஆம் நம்பர் ஞானகாரனாகிய கேதுவின் எண்ணாகும். 2-ஆகிய சந்திரனாகிய மனோஸ்காரனாகும். இவ்விரண்டு எண்களும் சேர்ந்து 9-ஆகிய செவ்வாயின் எண்ணாகும். பொதுவாக இந்த எந்திரத்தை பஞ்சகாய சுத்தி, பஞ்சகவ்ய சுத்தி, செய்து பிராண பிரதிஷ்டை செய்து பின்னர் மந்திரங்கள் கூறி வழிபட சிறப்பாகும். எங்களிடம் இவ்வாறு உருவாக்கப்பட்ட தாமிர தகட்டில் தங்க முலாம் பூசி பின்னர் பஞ்சகாய சுத்தி, பஞ்சகவ்ய சுத்தி,  பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட உயிரோட்டமான குபேர சக்கரம் கிடைக்கும். குபேரனுக்குரிய பீஜ மந்திரம் கூடிய வழிபாட்டு முறையும், குபேரனுடைய படமும் கிடைக்கும்.



குபேர மந்திரம் பின் வருமாறு:-


ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய

தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே

தேஹி தாபய ஸ்வாஹா 




குபேர காயத்ரி 
ஓம் யக்ஷராஜாய வித்மஹ
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத் 



1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள  சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!

குபேரன் 108 போற்றி

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108 குபேரா போற்றி போற்றி


No comments: