Tuesday 5 November 2013

மாந்திரீகம்-9

ஆண் பெண் வசிய விளக்கம்
சாதாரண தரம்

வசியமாக்க வேண்டிவரின் உடை ஒன்றில் அவருடைய பெயரையும் வசிய
மந்திரத்தையும் எழுதிபூஜையில் வைத்து அதை தினமும் விளக்குக்கு
அருகில் கட்டிவிட வேண்டும்.இப்படிச் செய்தால்பலிக்கும்.

1. தலைமுடி

வசியமாக்க வேண்டியவரின் தலை முடியினைப் பூஜையில் வைத்து துளசிக் செடியின்வேரைப் பிடுங்கி தலைமுடியை அதில் சுருட்டி காலை, மாலை, மந்திர, வசியம் செய்யவேண்டும். 7 நாட்கள் செய்தால் பலிக்கும்

2. ஐந்து வகை எண்ணெய்

ஐந்து வகையான எண்ணெயை எடுத்து போத்தலில் அல்லது ஒரு குப்பியில் கலந்துஅதை வசியமாக்க வேண்டியவர்களின் பெயருக்கு வசிய மந்திரம் செய்ய வேண்டும்.பிறகு இந்த எண்ணெயை ஓர் சுரையில் போட்டு அல்லது இடுப்பில் கட்டி கொள்ளவேண்டும் 21 நாட்களில் பலிக்கும்.

3. ஐந்து வகையான வேர்

ஐந்து வகையான வேர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பல் எடுத்து அதை பூஜைதட்டில் பெண், ஆண் வசிய சக்கரத்தை சாம்பலில் வரைந்து வசியமாக்க வேண்டியவரின்பெயரை அதில் எழுதி, வசிய மந்திர பூஜை செய்து சாம்பலில் சிறியதை சுரையில்போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அலலது நெற்றியில் பூசிக் கொள்ளலாம். சிறிதுசாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவியும் விடலாம். 7 நாள் செய்தால்பலிக்கும்.

4. சிறுநீர்

குப்பைமேனி செடியை பிடுங்கி கொண்டு வந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரில்போட்டு மூன்று நாள் சென்ற பின் அதன் வேரை துண்டித்து மந்திரப் பூஜையில் வைத்துஉச்சாடனம் செய்து சுரையில் போட்டு, கழுத்தில் கட்டிக் கொண்டால் அல்லது இடுப்பில்கட்டிக் கொண்டால் பலிக்கும்.

5. தலைப்பனை ஓலை

வசியமாகக் வேண்டியவர்களின் வீட்டிலிருந்து 7 உப்புக்கற்களை எடுத்துக் கொண்டுவந்து தலைப்பனை ஓலையில் சக்கரம் வரைந்து அதில் பெயர் எழுதி, மந்திர பூஜையில்வைத்து மந்திர உச்சாடனம் செய்து தாலிப்பனை ஓலையை வசியமாக்கவேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் புதைக்க வேண்டும்.  உப்பக்கற்களைவசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டு விட வேண்டும்.இவ்விதமாக பாவித்தால் பலிக்கும்.

மந்திரம் செய்யும் முறை

மந்திரங்கள் செய்வதற்கு முதலாவது கும்பம் பாவிக்க வேண்டும். ஒரு செம்பு அல்லதுகுடத்தை நன்றாக சுத்தம் செய்து அதில் நீர் நிரப்பி, மா இலைகள் வைத்து, கற்பூரம்கொழுத்தி ஆவிகளின் மந்திரங்களை சொல்லி ஆவிகைள அழைக்க வேண்டும். பிறகுஒரு தேசிக்காய் எடுத்து அதற்கு உருவம் அமைத்து, பூக்களால் அலங்கரித்து,பூஜைக்கான பொருள்களை வைத்து, மந்திர பூழை செய்ய வேண்டும். இலையில் அரிசிவைத்து அதில் கும்பத்தை வைக்க வேண்டும்.

பூஜை பொருட்கள் இரு வகை

1. பால், பொங்கல், பழவகை, கடலை, அவல், தாம்பூலம் பூக்கள்
2. கோழி, சாராயம், முட்டை, பூக்கள், சுருட்டு, எண்ணெய், கலந்த தீனிவகை
மந்திரம் செய்பவர் நன்றாக மந்திரங்களை கற்றிருக்க வேண்டும். கற்றுக்கொடுத்தஆசானிடமிருந்து குரு அபிஷேகம் பெற்றிக்க வேண்டும். குரு அபிஷேகம் பெறாமல்மந்திரங்கள் செய்தால் அது பலிக்காது. மந்திரங்கள் செய்யும்போது மந்திரச் சொற்களைசரியாக உச்சரிக்க வேண்டும்.
பூஜை பொருட்களையும் சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மந்திரம்பலிக்காது. சிலவேளை மந்திரக்காரருக்கே ஆபத்து வரும்.
மந்திரம் செய்ய தகுதியான ஸ்தானங்கள்

1. ஆற்றங்கரையில் பூஜைப்பொருட்களை வைத்து ஆற்று நீரில் இருந்து மந்திரம்செய்யலாம்

2. அமைதியான இடம், ஆலயம், அல்லது சுடுகாடு போன்ற இடங்களிலிருந்துசெய்யலாம். ஆள் நடமாட்டமில்லாத காடுகளிலிருந்தும் செய்யலாம்.

மந்திரங்கள் செய்யும்போது செம்புத் தகட்டில் அச்சரம் எழுதி அதில் மந்திர பதித்துசெய்து கொள்பவர்களின் பெயர்களையும் அதில் பதித்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.




No comments: